இதை தெரியாமல் IVF ICSI செய்யாதீர்கள்
குழந்தை செல்வம் என்பது அனைவருக்கும் அடிப்படையில் தேவையானது.
இன்றைய கால சூழலில் அதிகமான தம்பதியர்கள் குழந்தையின்மையினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு, இருக்கும் அறியாமையை நீக்கி, முழுமையான விழிப்புணர்வை வழங்கி, குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கும் அத்தனை வழிமுறைகளையும் தெளிவாக விளக்கம் கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, ஊக்குவித்து இயற்கையாகவும் தேவைப்பட்டால் சிகிச்சைகள் மூலமாகவும் குழந்தை பேரு அடைய வேண்டும்.
குழந்தையின்மையில் இறுதியான சிகிச்சை IVF /ICSI. இது அதிகமான செலவுகளை உட்படுத்தும். ஆதலால் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் கீழ் நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு இதனால் சற்று தயக்கமும், அச்சமும் ஏற்படுகின்றன. இதுக்கும் மேலாக இதில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று சாத்தியம் கிடையாது. மேலும் தம்பதிகளுக்கு கூடுன வயது, மருத்துவ குறைபாடு மற்றும் உயிரணு, முட்டைகள் எண்ணிக்கை, ஆரோக்கியம் குறைவாக இருந்தால், இன்னும் வெற்றி சதவீதம் குறைகின்றது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
என்னுடைய சொந்த அனுபவம் இது. தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக IVF/ICSI தேவைப்பட்டால் தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் முதன் முறையே வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் முழுமையாக, நிறைவாக தங்களது மருத்துவ குறைபாடுகளை சரி செய்து பின்னர் முயற்சி செய்தால் கண்டிப்பாக அவர்கள் குழந்தை பேரு அடைய முடியும். இவ்வாறு நான் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்கள் இதை நம்பிக்கையுடன், முழுமையாக செயல்படுத்தும் போது, சிலர் இயற்கையாகவே கருத்தரித்தார்கள்.
ஆகவே நம்பிக்கையுடன் முழு மனதுடன் உங்களின் குறையை கண்டுணர்ந்து அதனை முழுமையாக சரி செய்து, பின்னர் நீங்கள் IVF/ICSI செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியும், ஆரோக்கியமான குழந்தையும் கிடைக்கும்.
நான் கண்டறிந்த இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தம்பதிகளுக்கு IVF / ICSIன் முழு செயல்முறைகள், அதற்கான செலவினங்கள் முழுமையாக தெரியாதது தான். இந்த IVF / ICSI சிகிச்சியின் அறியாமையினால் சில தருணங்களில், சிகிச்சியில் தோல்வி அடைந்தவுடன், தம்பதிகளுக்கும், கருத்தரிப்பு மையங்களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது.
மற்றொன்று, தம்பதிகள் தேவையான பணத்தை தயார் செய்து, சிகிச்சை செய்து கொள்ளும்போது அதுவே இரு மடங்கு பல மடங்கு அதிகரிக்கும் போது, அந்த பணத்தை சேகரிக்க முடியாதவர்கள், மிகவும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு தம்பதிகள் IVF/ICSI சிகிச்சையின் போது பல இடையூறுகளைக் கண்டு மிகவும் வருந்துகிறார்கள்.
இதனை அவர்களுடன் ஒன்றாக நானும் உணர்ந்தேன்.
இவ்வாறு கஷ்டப்படும் தம்பதிகளுக்கு கண்டிப்பாக நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. என்னுடைய 25 வருட மருத்துவ சேவையில், குழந்தையின்மை பிரிவில், தம்பதிகள் எனக்கு மிகவும் வரவேற்பு, அங்கீகாரம், உயர்வு வழங்கினார்கள். என்னுடைய நன்றியை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு நான் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இதனைக் கருத்தில் கொண்டு, இந்த 27 பதிவுகளை கொடுத்து உள்ளேன்.
உலகளாவிய அளவில் தம்பதிகளுக்கு இந்த விழிப்புணர்வு, ஆலோசனை சென்று சேர வேண்டும். இதனால் தம்பதிகள் தெளிவாக, விளக்கமாக தங்களுடைய குறைகளை கண்டுணர்ந்து, அதற்குண்டான வழிமுறைகளை தெரிந்து, அவர்கள் மருத்துவ ரீதியாக தங்களை தயார் செய்து கொள்ளவும் முடியும், சரியான செலவினங்களை நிர்ணயித்து, அதனை முதலில் தயார் செய்து பிறகு எந்த ஒரு சிரமம் இன்றி, நிறைவாக சிகிச்சையை முடித்து, குழந்தை பேரு அடைய வேண்டும்.
மரு. சரவணன் லட்சுமணன் GSSSS
“குழந்தையின்மைக்கு நிறைவான தீர்வு – GSSSS “
IVF ICSIயில் வெற்றியை தக்க வைப்பது எப்படி? மரு.சரவணன் லட்சுமணன் GSSSS Fertility Chennai TN India
ஏன் IVF ICSI சிகிச்சையின் போது இரு விதமான ஊசிகள் போடுகிறார்கள்? அதன் முக்கியத்துவங்கள் செலவினங்கள்